/* */

ஈரோட்டில் நாளை அண்ணாமலை பங்கேற்கும் பா.ஜ. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

ஈரோடு சோலாரில் நாளை அண்ணாமலை பங்கேற்கும் பா.ஜ. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் நாளை அண்ணாமலை பங்கேற்கும் பா.ஜ. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
X

பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட முன்னாள் ஊடக பிரிவு சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு நோட்டீஸ்.

ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையம் அருகில் நாளை பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாளை நடக்கிறது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார்.

இதுகுறித்து பாரதீய ஜனதா கட்சியின் ஈரோடு மாவட்ட ஊடக பிரிவு தலைவர் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டுகால நல்லாட்சியின் சிறப்புகளை விளக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நாளை 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு சோலார் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்துக்கு ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி.சி.வேதானந்தம் தலைமை தாங்குகிறார். மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சி.சரஸ்வதி முன்னிலை வகிக்கிறார். பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

எனவே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Updated On: 29 Jun 2023 7:28 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  9. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!