/* */

ஈரோட்டில் தொலைந்துபோன 56 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

ஈரோட்டில் ரூ.8.37 லட்சம் மதிப்புள்ள, 56 தொலைந்துபோன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோட்டில் தொலைந்துபோன 56 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
X

தொலைந்துபோன செல்போன்களை உரியவரிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன் ஒப்படைத்தார்.

ஈரோட்டில் ரூ.8.37 லட்சம் மதிப்புள்ள, 56 தொலைந்துபோன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு செல்போன்கள் மாயம், திருட்டு, ஆன்லைன் பண மோசடி, வங்கி வாடிக்கையாளரிடம் பண மோசடி, சமூக வலைத்தளங்கள் மூலமாக ஏற்படும் பிரச்சனைகள் மீது புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், செல்போன்கள் திருட்டு மற்றும் மாயமானது தொடர்பாக, பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், சைபர் கிரைம் பிரிவினருடன் இணைந்து காவல்துறையினர் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, 56 செல்போன்களை காவல்துறையினர் மீட்டனர்.


அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜானகிராமன், கனகேஸ்வரி ஆகியோர் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்கள். மீட்கப்பட்ட செல்போன்களின் மதிப்பு ரூ.8 லட்சத்து 37 ஆயிரத்து 491 ரூபாய் ஆகும். மேலும், கடந்த 2021 முதல் 2023 வரை ரூ.1 கோடியே 9 லட்சத்து 48 ஆயிரத்து 51 மதிப்பிலான 741 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உள்ளதாக ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 Feb 2023 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி