/* */

கபீர் புரஸ்கர் விருதுக்கு விண்ணப்பம் செய்ய ஈரோடு கலெக்டர் வேண்டுகோள்

ஈரோடு மாவட்டத்தில் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கபீர் புரஸ்கர் விருதுக்கு விண்ணப்பம் செய்ய  ஈரோடு கலெக்டர் வேண்டுகோள்
X

ஈரோடு மாவட்ட கலெக்டர்  கிருஷ்ணனுண்ணி.

ஈரோடு மாவட்டத்தில் சமுதாய நல்லிணக்கத்துக்கு வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கபீர் புரஸ்கர் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தினவிழாவின் போது வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா ரூ.20000, ரூ.10000 மற்றும் ரூ.5000 தகுதியுடையோருக்கு வழங்கப்படுகிறது. சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர்.

கபீர் புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பம் செய்பவர்கள் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசு பணியாளர்கள் ஆகியோர் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள் சமூதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர்.

மேலும் இவ்விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ, வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மன வலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. மேற்காணும் விருதிற்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான http://awards.tn.gov.in , www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களோடு இணைத்து மூன்று நகல்களில் வரும் 19.12.2022 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், ஈரோடு மாவட்ட சமூகநல அலுவலகம், 6-வது தளம், மாவட்ட ஆட்சியரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்து விருதினை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பங்களை 19.12.2022 மாலை 5 மணிக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். உரிய காலத்துக்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர். இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, முதலமைச்சரால் 26.1.2023 குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுவர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 16 Dec 2022 6:38 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  4. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  6. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  7. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!
  8. ஆரணி
    முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!
  9. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுனர் பலி...!
  10. காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்...