/* */

ஈரோட்டில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி, ஈரோட்டில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு, ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி, ஈரோட்டில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் திங்கட்கிழமை (நேற்று) மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுக்குழு நடவடிக்கை சார்பாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழக ஆசிரியர் கூட்டணி டிட்டோ ஜாக் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமாமணி தலைமையில் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், பேச்சு வார்த்தையில் அளிக்கப்பட்ட உறுதிக்கு மாறாக பி.எட். பயிற்சி மாணவர்களை பள்ளிகளுக்கு ஆய்வுக்கு அனுமதிப்பதைக் கைவிட வேண்டும். ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச் சுமைகளை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வித் தரத்தினை முற்றிலும் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுவதும் கைவிட வேண்டும்.

தொடக்கக் கல்வித் துறையில் 1 முதல் 8 வகுப்புகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து கற்பித்தல் பணியில் ஈடுபட இயலாத வகையில் இஎம்ஐஎஸ் செயலியில் பல்வேறு பதிவேற்றங்களைச் செய்யும் பணியினை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட இயலாத காரணத்தால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கல்விப் பணியைத் தவிர பிற பணிகளில் குறிப்பாக இஎம்ஐஎஸ் பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவித்திட வேண்டும்.

சிசிஆர்சி பயிற்சிகள் மற்றும் பிற பயிற்சிகளுக்கான ஏதுவாளர்களாக ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவதால் கற்றல், கற்பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பயிற்சி ஏதுவாளர்களாக ஆசிரியர்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். விடுமுறை நாட்களில் பயிற்சிகள் அளிப்பதைக் கைவிட வேண்டும்.

பள்ளி மேலாண்மைக்குழு ஒவ்வொரு மாதமும் கூட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு 3 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே மேற்படி கூட்டங்களைக் கூட்ட வேண்டும். பேச்சு வார்த்தை அளிக்கப்பட்ட உறுதிக்கு மாறாக பிஎட் பயிற்சி மாணவர்களை பள்ளிக்கு ஆய்வுக்கு அனுமதிப்பதை கைவிட வேண்டும். ஆசிரியர்கள் பணிச்சுமையை ஏற்படுத்தும் வகையில் உள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுவதும் கைவிடக் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் டிட்டோ ஜாக் மாநில திட்ட குழு உறுப்பினருமான முத்துராமசாமி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர்கள் சரவணன், இராமணி, கோபாலகிருஷ்ணன், அருள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் வேலுச்சாமி, மதியழகன், சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாநிலத் துணைத் தலைவர் அருள் சுந்தர ரூபன் நன்றி கூறினார்.

Updated On: 12 Sep 2023 6:37 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  8. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  9. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  10. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...