/* */

ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுகவினர் அமைதி பேரணி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் அமைதி பேரணி திங்கட்கிழமை நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுகவினர் அமைதி பேரணி
X

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் அமைதி பேரணி திங்கட்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் திங்கட்கிழமை (நேற்று) அனுசரிக்கப்பட்டது. இந்நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அவரது திருவுருவ சிலை மற்றும் புகைப்படத்தை வைத்து திமுகவினர் மரியாதை செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து துவங்கிய அமைதி பேரணி ஊர்வலம் முனிசிபல் காலனி கருணாநிதி சிலை அருகே முடிவடைந்தது.

இந்நிகழ்ச்சியில், மாநில கழக நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மாநில கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் வீரமணி ஜெயக்குமார், மற்றும் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், முன்னாள் எம்பி கந்தசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், செல்ல பொன்னி, சின்னையன், மாவட்ட பொருளாளர் பழனிசாமி மற்றும் மாநில, மாவட்ட, மாமன்ற உறுப்பினர் மகளிர் அணியினர், மாநகர, பகுதி கழக வட்டக் கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Updated On: 8 Aug 2023 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்