/* */

ஆடி அமாவாசை; பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்யவும், குளிக்கவும் அனுமதி.

நாளை ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் பக்தர்கள் பரிகாரம் செய்யவும், ஆற்றில் புனித நீராடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஆடி அமாவாசை; பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்யவும், குளிக்கவும் அனுமதி.
X

பவானி கூடுதுறை

ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள கூடுதுறையில் பவானி ஆறு மற்றும் காவிரி ஆற்றுடன், கண்ணுக்கு புலப்படாத தேவர்களின் அமுத நதியும் இங்கு கூடுவதாக ஐதீகம் உள்ளது. இதனால் அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் கூடுதுறையில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சங்கமேஸ்வரரை வழிபட்டால் குடும்பம் தழைத்தோங்கும் என்பது நம்பிக்கை.

ஆண்டுதோறும் தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி மாத பிறப்பு, ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு ஆகிய நாட்களில் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்து புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவர். மேலும் நாக தோஷம், திருமண தோஷம் உள்பட பல்வேறு தோஷங்கள் நீங்கவும், பக்தர்கள் பரிகார வழிபாடும் செய்வார்கள்.

இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடுதுறைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தற்போது ஆற்றில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்து. ஆனால் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கூடுதுறை காவிரி ஆற்றின் படித்துறையில் கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கி குளிக்க முடியாதவர்கள், தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து குளிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பரிகாரம் மற்றும் திதி தர்ப்பணங்கள் செய்வதற்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

.கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் உடமைகளை பாதுகாத்துக் கொள்ள 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 27 July 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...