/* */

சென்னிமலையில் அக்னி ஸ்டீல்ஸ் சார்பில், ரூ.50 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

ஈங்கூரில் அக்னி ஸ்டீல்ஸ் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.50 லட்சத்தில் அரசு வகுப்பறை கட்டிடங்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

சென்னிமலையில் அக்னி ஸ்டீல்ஸ் சார்பில், ரூ.50 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்
X

ஈங்கூர் ஊராட்சியில், அக்னி ஸ்டீல் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, வகுப்பறை கட்டடம், ரேஷன் கடை உள்ளிட்ட பணிகளுக்கான கல்வெட்டை, அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். அருகில், ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, அக்னி ஸ்டீல்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, செயல் இயக்குனர் சக்தி கணேசன் ஆகியோர் உள்ளனர்.

ஈங்கூரில் அக்னி ஸ்டீல்ஸ் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.50 லட்சத்தில் அரசு வகுப்பறை கட்டிடங்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈங்கூர் ஊராட்சியில் அக்னி ஸ்டீல்ஸ் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் முடிவுற்று அதனை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி விழா சனிக்கிழமை (நேற்று) நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கினார். ஈரோடு எம்பி கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று, அக்னி ஸ்டீல்ஸ் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியின் கீழ் (சிஎஸ்ஆர்) ஈங்கூர் அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.12.03 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறையினையும், கவுண்டனூரில் ரூ.9.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடையினையும், நல்லமுத்தாம்பாளையம், சரவம்பதி புதூர், புலவனூர், வேலாயுதம்பாளையம் ஆகிய இடங்களில் தலா ரூ.6.49 லட்சம் மதிப்பீட்டில கட்டப்பட்ட சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும் என மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியின் போது, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) டாக்டர் மனிஷ் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காயத்ரி இளங்கோ, அக்னி ஸ்டீல்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, செயல் இயக்குநர் சக்தி கணேஷ், துணைத் தலைவர் ஜெயக்குமார், ஈங்கூர் ஊராட்சி தலைவர் ஈஸ்வரி, துணைத் தலைவர் விஜயா, பெருந்துறை ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 22 Oct 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்