பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (இன்று) ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
X

வாணிக்கவுண்டம்பாளையம் முதல் விஜயமங்கலம் வரையிலான தார்சாலை மேம்பாடு செய்யும் பணியினை ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (இன்று) ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீனாபுரம் மற்றும் பெரியவீரசங்கிலி ஆகிய கிராம ஊராட்சி பகுதிகளில் ரூ.1.69 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீனாபுரம் ஊராட்சி, வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.29.62 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார். மேலும், பள்ளி வளாகத்தில் செயல்படும் உணவுக்கூடம், தலைமை ஆசிரியர் அறை மற்றும் மாணவ, மாணவியர்களின் கழிவறைகளையும் ஆய்வு செய்தார்.


தொடர்ந்து, பெரியவீரசங்கிலி ஊராட்சி, கிரே நகர் பகுதியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.29.60 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினையும் மற்றும் சீனாபுரம் ஊராட்சிக்குட்பட்ட வாணிக்கவுண்டம்பாளையம் பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் வாணிக்கவுண்டம்பாளையம் முதல் விஜயமங்கலம் வரையிலான தார்சாலை மேம்பாடு செய்யும் பணியினையும் என மொத்தம் ரூ.1.69 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு திட்டப்பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பெருந்துறை அரசு மருத்துவமனையினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் செயல்படும் பிரசவ வார்டு, உள்நோயாளிகள் பிரிவு, குழந்தைகள் நல பிரிவு, காய்ச்சல் பகுதி, நவீன சமையல் கூடம், அறுவை அரங்கு, அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம் மற்றும் ஆய்வகம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.


இந்நிகழ்வின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய்குமார் மீனா, பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், உதவிப் பொறியாளர்கள் சரவணன், அக்ஷய்குமார், பெருந்துறை வட்டாட்சியர் பூபதி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 19 Sep 2023 11:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. திருவில்லிபுத்தூர்
    கிராமசபை கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சிசெயலாளர்
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரின் கலகோட் பகுதியில் தீவிர பயங்கரவாத எதிர்ப்பு...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருவள்ளூர்
    கர்நாடக அரசை கண்டித்து ஒரக்காடு கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு...
  7. தென்காசி
    தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவள்ளூர்
    சந்திரபாபு நாயுடு கைது கண்டித்து நாயுடு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!
  9. நாமக்கல்
    ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாய நிலங்களில் மரம் நடும்...
  10. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்தி பிறந்தநாள் விழா..!