/* */

பல்வேறு போர்க் கலைகளைக் கற்றுத் தேர்ந்த தீரன் சின்ன மலை நினைவு நாள்.

Dheeran Chinnamalai Quotes in Tamil-வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த தீரன் சின்ன மலை தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்ட நாள் …

HIGHLIGHTS

பல்வேறு போர்க் கலைகளைக் கற்றுத் தேர்ந்த தீரன் சின்ன மலை நினைவு நாள்.
X

Dheeran Chinnamalai Quotes in Tamil

தீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், மற்றும் மருது சகோதரர்கள், போன்றவர்கள் வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள். 'தீர்த்தகிரி கவுண்டர்' என்றும், 'தீர்த்தகிரி சர்க்கரை' என்றும் அழைக்கப்படும் தீரன் சின்னமலை, வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர்.

பல்வேறு போர்க் கலைகளைக் கற்றுத் தேர்ந்து, துணிச்சலான போர் யுக்திகளைத் தனது படைகளுக்குக் கற்றுத் தந்து, இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று, ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டு, அவர்களின் கிழக்கிந்திய கம்பெனியை கருவறுக்க எண்ணினார். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்த அவர் மூன்று முறை வெற்றியும் கண்டார். கொங்கு மண்ணில் பிறந்து, வீரத்திற்கு அடையாளமாக விளங்கி, தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் நிலைத்திருக்குமாறு செய்த தீரன் சின்னமலை

நாட்டைப் பற்றியோ தாம் சார்ந்த இனத்தை பற்றியோ சிறிதும் அக்கறை கொள்ளாத தகுதியற்றவர்களை தலையில் வைத்துக் கொண்டாடிக் கொண்ட அதே சமயம் நாட்டின் விடுதலைக்காக உழைத்த உத்தமர்களை இன்றைய இளைய தலைமுறையினர் மறந்து வரும் இந்த வேளையில், நாட்டுக்காக தங்கள் வாழ்வையும் வசந்தத்தையும் தியாகம் செய்த இந்த மாமனிதர்களைப் பற்றி சில நொடிகளாவது நாம் சிந்திக்கலாமே?.

தீரன் சின்னமலை அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தமபதியருக்கு மகனாக ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 1756 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.

பழைய கோட்டைப் பட்டக்காரர்கள் புலவர்களை ஆதரித்து, அவர்கள் வாயடைக்கும் அளவிற்கு அவர்களின் கவி மற்றும் புலமைக்காக அவர்களுக்குப் பரிசில் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தீர்த்தகிரி கவுண்டர் அவர்கள், அவர்களின் மரபு வந்ததால், அவர் இளம்பருவத்திலே 'தீர்த்தகிரிச் சர்க்கரை' என்றும் அழைக்கப்பட்டார். மேலும் அவர், தனது இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில்பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை, போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து, இளம் வீரராக உருவெடுத்தார். பல தற்காப்புகலைகள் அறிந்திருந்தாலும், அவர் அக்கலைகளைத் தன் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்து, சிறந்த போர்ப்பயிற்சி அளித்து, அவரது தலைமையில் இளம்வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார்.

தீர்த்தகிரி கவுண்டர் அவர்களின் பிறப்பிடமான கொங்கு நாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, "சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்" என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல், அவர் 'தீரன் சின்னமலை' என்று அழைக்கப்பட்டார்.

தீரன் சின்னமலை வளர வளர நாட்டில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் வளர்ந்தது. இதை சிறிதளவும் விரும்பாத சின்னமலை, அவர்களைக் கடுமையாக எதிர்த்தார். அச்சமயத்தில், அதாவது டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, 1782 ஆம் ஆண்டில் மைசூர் மன்னர் மரணமடைந்ததால், அவரது மகனான திப்பு சுல்தான் அவர்களை ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவரும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வேரோடு வெட்ட எண்ணினார்.

இதுவே, அவர்களுக்கும் சாதகமாக அமைந்தது. ஆகவே, அவரது நண்பர்களோடு அவர் ஒரு பெரும் படையைத் திரட்டி, மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கைக்கோர்க்க முற்பட்டார். ஏற்கனவே, திப்புவின் தந்தையை ஒருமுறை எதிர்த்த நிகழ்வையும், அவரது வீரத்தையும் பற்றி அறிந்த திப்பு சுல்தான், அவருடன் கூட்டணி அமைத்தார். அவர்களின் கூட்டணி, சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போன்ற இடங்களில், ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த மூன்று மைசூர் போர்களில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெரும் சேதம் விளைவித்து, வெற்றிவாகை சூடியது.

ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, அந்த மாவீரனையும் மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்தனர். கைது செய்து அவர்களை, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள், ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார்.

தீரன் சின்னமலையின் உருவச்சிலை தமிழக அரசால் சென்னையில் அமைக்கப்பட்டது.

ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் 'தீரன் சின்னமலை மாளிகை' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 31 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டில், இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை, 'தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை' வெளியிட்டது.

இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது. பூலித்தேவன், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகிய வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பல வீரர்கள் பிறந்த வீர பூமி நம் தமிழ்நாடு.

கட்டபொம்மனை போல வெள்ளையர்களுக்கு அடிபணியாது இறுதி வரை எதிர்த்து மரணம் அடைந்தவர் சின்னமலை. மறைந்திருந்து தாக்கும் கொரில்லா போர் முறையை தன்னுடைய காலத்திலேயே செயல்படுத்திக் காட்டிய மாவீரன் இந்த தீரன் சின்னமலை. ஓடிக்கொண்டு இருக்கும் குதிரையின் முழங்காலில் குறி தவறாமல் சுடுவதில் மிக மிக வல்லவர்.

ஜூலை 31 தீரன் சின்னமலையின் இறந்தநாள்… இந்நாளில் அவரின் வரலாற்றை படித்து இந்திய விடுதலை போரில் அவரின் தியாகத்தை நினைவு கூர்வோம்.

எண்ணமெலாம் நெய்யாக

எம்முயிரினுள் வளர்ந்த

வண்ண விளக்கிஃது மடியத்

திருவுளமோ?

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்

வாராது போலவந்த மாமணியைத்

தோற்போமோ?

இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற்

பெற்றதன்றோ?

அன்பற்ற மாக்கள் அதைப் பறித்தாற்

காவாயோ?

– சுப்ரமணிய பாரதி

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 March 2024 6:05 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு