ஈரோட்டில் பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான கிராஸ் கண்ட்ரி ரேஸ் போட்டி
பாரதியார் பல்கலைக்கழக கல்லூரி களுக்கான கிராஸ் கண்ட்ரி ரேஸ் போட்டி சித்தோடுவாசவிகல்லூரி யில் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது
HIGHLIGHTS

போட்டியில் வெற்றி பெற்ற டாக்டர்.என்.ஜி.பி. கல்லூரி மாணவர்களுக்கு பரிசினை பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி வழங்கினார். உடன் உடற்கல்வி இயக்குனர் ரமேஷ்,சித்தோடு காவல் நிலைய ஆய்வாளர் முருகையன், முதல்வர் தாமரைக்கண்ணன், கல்லூரி செயலர் சதாசிவம், ஈரோடு கல்யாணி கிட்னி கேர் சென்டர் சரவணன், பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் ராஜேஸ்வரன் ஆகியோர் உள்ளனர்.
ஈரோட்டில் பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான கிராஸ் கண்ட்ரி ரேஸ் போட்டி சித்தோடு வாசவி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான கிராஸ் கண்ட்ரி ரேஸ் போட்டி, ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள வாசவி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. போட்டியில் பாரதியார் பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரியில் இருந்து மொத்தம் 45 கல்லூரிகள் கலந்து கொண்டன.
ஆண்கள் பிரிவில் 24 கல்லூரிகளும், பெண்கள் பிரிவில் 25 கல்லூரிகள் கலந்து கொண்டன. இப்போட்டியினை, சித்தோடு காவல் நிலைய ஆய்வாளர் முருகையன் கொடியசைத்து ஓட்டப் போட்டியை தொடக்கி வைத்தார். இதில், வாசவி கல்லூரி முதல்வர் தாமரைக்கண்ணன், உடற்கல்வி இயக்குனர் ரமேஷ், பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் ராஜேஸ்வரன் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர்.
போட்டியின் முடிவில் பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான கிராஸ் கண்ட்ரி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கோயம்புத்தூர் டாக்டர்.என்.ஜி.பி.கல்லூரி பெற்றது. பொள்ளாச்சி இரண்டாம் இடத்தை சரஸ்வதி தியாகராஜ கல்லூரி அணியும், மூன்றாம் இடத்தை கோபி கலை அறிவியல் கல்லூரி அணியும், நான்காம் இடத்தை கோவை சி எம்.எஸ். கல்லூரி அணியினர் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கோவை நிர்மலா கல்லூரியும், இரண்டாவது இடத்தை பி.எஸ்.ஆர். கிருஷ்ணம்மாள் கோயம்புத்தூர் அணியும், மூன்றாம் இடத்தை கோபி கலை அறிவியல் கல்லூரி அணியும் நான்காம் இடத்தை கோவை பாரதியார் பல்கலைக்கழக அணியும் பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பவானி துணை காவல் கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவிற்கு, வாசவி கல்லூரி செயலாளர் சதாசிவம் தலைமை வகித்தார். முதல்வர் தாமரைக்கண்ணன் வரவேற்புரையாற்றினார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக அபிராமி கிட்னி கேர் சென்டர் டாக்டர் சரவணன், சித்தோடு காவல் நிலைய ஆய்வாளர் முருகையன், பாரதியார் பல்கலைக்கழக கழக உடற்கல்வி இயக்குனர் ராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு கொண்டு பரிசுகளை வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் இப்போட்டியில் முதல் ஆறு இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அனைத்தின் இந்திய பல்கலைக் கழகத்திற்கான போட்டியில் பங்கு பெற உள்ளனர்.
இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வாசவி கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ரமேஷ், என்சிசி மாணவர்கள் என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் பேராசிரியர் குழுவினர் செய்திருந்தனர். முடிவில், வாசவி கல்லூரி பொருளாதார துறை தலைவர் நாச்சிமுத்து நன்றி கூறினார்.