ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக 3 பேர் தற்கொலை: போலீஸார் விசாரணை

ஈரோடு மாவட்டத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக  3 பேர் தற்கொலை: போலீஸார் விசாரணை
X

க்ரைம் செய்திகள் (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

டிரைவர் தூக்கிட்டு தற்கொலை:-

ஈரோடு கருவேலம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழழகன் (29), தனியார் நிறுவன டிரைவர். இவர், அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால், கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், தமிழழகனின் பெற்றோர் நேற்று காலை வெளியில் சென்றுள்ளனர். அப்போது வீட் டின் படுக்கை அறையில் தமிழழகன் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். வீடு திரும்பிய பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தமிழழகனை மீட்டு சோதனை செய்து பார்த்த போது உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து, மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டெய்லர் தற்கொலை:

கொடுமுடி, மேற்கு அக்ர ஹாரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (56), டெய் லர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த சண்முகம் தனது மனைவியி டம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர் பணம் தராததால், சண்முகம் எலி மருந்தை சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த் துள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை:

சென்னிமலை டவுன், அம்மாபாளையம் செங்கோடகவுண்டர் வீதியில் வசிப்பவர் மணி (35). இவர் சென்னிமலை-அரச்சலூர் ரோட்டில் அண்ணமார் தியேட்டர் அருகே இறைச்சிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இங்கு வந்து தங்கி கறிக்கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி மனைவி உள்ளார்.ஆனால் மனைவியுடன் வாழாமல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். பின்னர் ஊட்டியை சேர்ந்த திவ்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் திவ்யாவுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக அவர் ஊருக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த மணி அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சென்னிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணி உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 Jan 2023 2:15 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  பாரம்பரிய மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க...
 2. தஞ்சாவூர்
  தஞ்சையில் தேசிய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள்
 3. லைஃப்ஸ்டைல்
  பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்வது எது? ஆள் பாதி...ஆடை பாதி:உங்களுக்கு...
 4. புதுக்கோட்டை
  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
 5. தூத்துக்குடி
  தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் போராட்டம்.. போலீஸ்...
 6. திருப்பரங்குன்றம்
  திருப்பரங்குன்றம் அருகே ரயில் பாலத்தில் மின்கசிவு: அதிருஷ்டவசமாக உயிர்...
 7. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி
 8. விளாத்திகுளம்
  விளாத்திக்குளத்தில் மினி மாரத்தான் போட்டி.. 300-க்கும் மேற்பட்டோர்...
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
 10. தூத்துக்குடி
  காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி...