Begin typing your search above and press return to search.
அந்தியூர் விற்பனைக்கூடத்தில் ரூ.50.36 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில், 50 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
HIGHLIGHTS

கோப்பு படம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு அந்தியூர், அத்தாணி, கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், சென்னம்பட்டி, ஆப்பக்கூடல், கோவிலூர், எண்ணமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,391 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
மொத்தம் 500.55 குவிண்டால் பருத்தி, குறைந்தபட்ச விலையாக 97 ரூபாய் 29 பைசாவிற்கும் அதிகபட்ச விலையாக 107 ரூபாய் 19 பைசாவிற்கும் விற்பனையானது. நேற்றையய வர்த்தகத்தில் மொத்தம் 50 லட்சத்து 35 ஆயிரத்து 597 ரூபாய்க்கு ஏலம் போனதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.தர்மபுரி, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் பருத்தியை கொள்முதல் செய்து சென்றனர்.