Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் மட்டும் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS

பைல் படம்
ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 15 நாட்களாக தினசரியாக மொத்தம் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாநில சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 961பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.