/* */

அந்தியூரில் தொடர் தேடுதல் வேட்டை: 4 யானை தந்தம் பறிமுதல்; 7 பேர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி மாவோயிஸ்ட் போலீசாரின் தொடர் தேடுதல் வேட்டையில் 4 யானை தந்தங்கள் பறிமுதல், 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும், இரண்டு பேர் தலைமறைவு.

HIGHLIGHTS

அந்தியூரில் தொடர் தேடுதல் வேட்டை: 4 யானை தந்தம் பறிமுதல்; 7 பேர் கைது
X

கைதானவர்களை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் வனப்பகுதிகளின் அருகாமையில் உள்ள கிராமங்களில் யானைத் தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதாக பர்கூர் மலைப்பகுதி மாவோயிஸ்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அந்தியூர் அருகே உள்ள சந்திபாளையம் ராமசாமி தோட்டத்தில் போலீசார் சோதனையிடும் போது தென்ன மட்டைகளுக்கு நடுவே மறைத்து வைத்திருந்த மூன்று யானை தந்தங்களை எடுத்தனர்.

இது சம்பந்தமாக சந்திபாளையம் நடுவூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (40), புதுக்காடு பகுதியைச் சேர்ந்த வரதராஜன் (47), பழைய பழைய பாளையம் பிரபு குமார் (37), வாணிபுத்தூர் கெம்பனூர் ஊராளி குமாரசாமி (50), கிருஷ்ணகிரி காமராஜ் நகர் பகுதி சேர்ந்த விஜயகுமார் (33), திருப்பூர் கணபதிபாளையம் முருகப்பசெட்டியார் காலனி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (33), ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் தலைமறைவான பர்கூர் மலைப்பகுதி பெஜில்பாளையத்தைச் சேர்ந்த சித்தேஷ், முருகன் ஆகிய ஆகிய இருவரையும் போலீசார் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர். பிடிபட்ட யானைத் தந்தங்கள் மற்றும் குற்றவாளிகள் அந்தியூர் வனச்சரகர் உத்தரசாமியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


இதேபோல்‌ பர்கூர் மலைப்பகுதி பெரியூர் என்ற இடத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்னரையடி நீளமுள்ள ஒரு தந்தம் எடுக்கப்பட்டது. இதனைப் பதிக்க வைத்திருந்த பெரியூர் நாகன்(35) ‌ கைது செய்யப்பட்டார். மேலும் இதில் முக்கிய குற்றவாளியான பெரியூர் மாதேவன்(37) என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதில் பிடிபட்ட யானை தந்தம் மற்றும் குற்றவாளியை பர்கூர் ரேஞ்சர் பிரசாந்குமாரிடம் போலீசார் ஒப்படைத்தனர். பர்கூர் மலைப்பகுதி மாவோயிஸ்ட் போலீஸாரால் ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு ஜோடி யானை தந்தங்கள் மற்றும் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 யானை தந்தங்கள், 7 பேர் கைது செய்யப்பட்டு அந்தியூர், பர்கூர் வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 15 Sep 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    CIBIL ஸ்கோர் ரொம்ப குறைந்திருந்தால்...? - அதை உயர்த்த இதை எல்லாம்...
  2. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  3. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  4. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  6. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  7. கோவை மாநகர்
    சிறு,குறு தொழில் மூலப்பொருள் விலை கட்டுப்படுத்தப்படும்: கணபதி...
  8. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  9. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
  10. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்