ஈரோட்டில் தக்காளி கிலோ ரூ. 100க்குள் விற்பனை செய்ய கூட்டுறவுத் துறை முயற்சி

இதன் மூலம் மக்களுக்கு கிலோ ரூ.100க்குள் தக்காளி கிடைக்கும் என கூட்டுறவுத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஈரோட்டில் தக்காளி கிலோ ரூ. 100க்குள் விற்பனை செய்ய கூட்டுறவுத் துறை முயற்சி
X

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு பசுமைப் பண்ணை அங்காடி மூலம் தக்காளி விற்பனை செய்ய பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மக்களுக்கு கிலோ ரூ.100க்குள் தக்காளி கிடைக்கும் என கூட்டுறவுத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டுகளில் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்தபோது கொரோனா காலத்தில் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், கூட்டுறவில் சிந்தாமணி மூலமும், தோட்டக் கலைத் துறை, வேளாண் துறை மூலம், பசுமைப் பண்ணை அங்காடி மூலம் அனைத்து வகையான காய்கறிகளும், வெங்காயமும் விற்பனை செய்யப்பட்டன.

வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, தற்போது தக்காளி விலை ஒரு கிலோ இப்போது ரூ. 110 முதல் ரூ. 130க்கு மேல் விற்பனையாகிறது. இதைக் கட்டுப்படுத்த ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு மூலம் சிந்தாமணி கடைகளிலும் தோட்டக் கலைத் துறை, வேளாண் துறை மூலம் பசுமைப் பண்ணை நுகர்வோர் காய்கறி கடை, வாகனங்கள் மூலமும் தக்காளியை வாங்கி விற்க பரிசீலனை நடைபெற்று வருகிறது.இதுகுறித்து கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், தாளவாடி, சத்தியமங்கலம், கடம்பூர், பர்கூர் உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தக்காளி விளைகிறது. அவற்றை அதிகாரிகள் மூலம் கண்காணித்து, நேரடியாக விவசாயிகளிடம் தக்காளியை வாங்கி, இங்குள்ள விலைப்படி ரூ.85 முதல் ரூ. 100க்குள் மக்களுக்கு விற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு சார்பில் இன்னும் உத்தரவு வரவில்லை. இருப்பினும் விவரங்கள் சேகரிக்கக் கோரியதால் தக்காளி விவசாயிகளின் விவரங்களைச் சேகரித்துள்ளோம். அரசு செயல்படுத்த உத்தரவிட்டதும் இம்மாவட்ட உற்பத்தி தக்காளியை நேரடியாகவும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் கூட்டுறவு மூலம் வாங்கி வந்து விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றனர்.

Updated On: 24 Nov 2021 4:30 PM GMT

Related News