/* */

பவானி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

பவானி அருகே தேசிய நெடுஞ்சாலை வாகன விபத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பவானி அருகே விபத்தில் கல்லூரி மாணவர்  உயிரிழப்பு
X

பைல் படம்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தூக்கணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மெல்வின் ஜாசன் (வயது 21). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். நேற்று மாலை இவர் தனது நண்பரான மேட்டூர் கொளத்தூர் பகுதியை சேர்ந்த பரத்பிரியன் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரியில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். சேலம்-கோவை பைபாஸ் ரோடு பவானி லட்சுமி நகர் அருகே உள்ள சமத்துவபுரம் மேடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்த முயற்சி செய்து உள்ளனர்.

அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்தவர் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை வலது பக்கம் திரும்பினர். இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி மாணவர் மெல்வின் ஜாசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். இடது பக்கம் விழுந்த பரத் பிரியனுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று இறந்த மெல்வின் ஜாசன் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயம் ஏற்பட்ட பரத் பிரியன் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 July 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?