ஈரோடு வேலைவாய்ப்பு முகாமில், மாவட்ட சிறப்பு திறன் கையேடு வெளியீடு

ஈரோட்டில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், மாவட்ட சிறப்பு திறன் கையேட்டினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஈரோடு வேலைவாய்ப்பு முகாமில், மாவட்ட சிறப்பு திறன் கையேடு வெளியீடு
X

இளைஞர்களுக்கான வாழ்வாதார பயிற்சிகள் அடங்கிய, மாவட்ட சிறப்பு திறன் கையேட்டினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதனை, எம்.பி. கணேசமூர்த்தி, முன்னிலையில், கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்து, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் மூலம் இளைஞர்களுக்கான வாழ்வாதார பயிற்சிகள் அடங்கிய, மாவட்ட சிறப்பு திறன் கையேட்டினை வெளியிட்டார்.


பின்னர், இதுகுறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததாவது:- ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து திறன் செயல்பாடுகள் குறித்த விபரங்களான EDII - தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் குறித்தும், நபார்டு மூம் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதற்கான திறன் உருவாக்கம் (CAT), குறித்தும், குறு, நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வாழ்வாதார நிறுவனம் மற்றும் மேம்பாட்டுத்திட்டம் (LEDP) குறித்தும், மகளிர் திட்டத்தின் மூலம் தீன் தயாள் கிராமப்புற இளைஞர்களுக்கான 100% வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சி திட்டம் குறித்தும், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் குறித்தும், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் குறித்தும், தேசிய பால்வன வாரியம், (NDDB) தென் மண்டல செயல் விளக்கம் மற்றும் பயிற்சி மையம் குறித்தும், கால்நடை மருத்துவ ஜபல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் குறித்தும், தோட்டகலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் குறுகிய கால திறன் பயிற்சி குறித்தும், இளைஞர்களுக்கான வாழ்வாதார பயிற்சிகள் அடங்கிய விபரங்கள் (https://me- qr.com/HE7aqz64) என்ற குறியீட்டின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


மேலும், வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் க்ரிஷி விக்யான் கேந்திரா (KVK) குறித்தும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் கிருஷி விக்யான் கேந்திரா திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) குறித்தும், ஊரக இளைஞர்களுக்கு வேளாண் திறன் பயிற்சி குறித்தும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தன்னார்வ பயிலும் வட்டம் குறித்தும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்தும், மாவட்ட தொழில் மையம் மூலம் திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத்திட்டம் (MSME) குறித்தும், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்தும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் குறித்தும், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மகளிர் திட்டம் மூலம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்தும், நபார்டு மூலம் திறள் மேம்பாட்டுத்திட்டம், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் மூலம் கைவினைஞர் பயிற்சித்திட்டம் குறித்தும், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் (TNSDC) குறித்தும், முன்கற்ற திறனை அங்கீகரித்தல் குறித்தும், பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத்திட்டம் (PMKVY) குறித்தும் வேலைநாடும் இளைஞர்களுக்கான வாழ்வாதார பயிற்சிகள் அடங்கிய விபரங்கள் (https://me- qr.com/HE7aqz64) என்ற குறியீட்டின் மூலம் தெரிந்து கொண்டு வேலைநாடும் இளைஞர்கள் சிறந்த முறையில் சுய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இமாமுகாமில், கோவை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை) ஞானசேகரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கெட்ஸி லீமா அமாலினி, உதவி இயக்குநர் (ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்) ராதிகா, நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் சண்முகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதி, கல்லூரி முதல்வர் மனோகரன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 March 2023 3:37 PM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
 2. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
 3. திருவண்ணாமலை
  நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
 4. நாமக்கல்
  மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
 5. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
 6. திருவண்ணாமலை
  அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து கையெழுத்து இயக்கம்
 7. தேனி
  சினிமா பாணியில் 41 ஆண்டுகளாக திருடியே வாழ்ந்த பலே குற்றவாளி
 8. திருவண்ணாமலை
  அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
 9. மாதவரம்
  செங்குன்றம் பேரூர் 17வது வார்டு திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
 10. கும்மிடிப்பூண்டி
  கும்மிடிப்பூண்டியில் 123 யோகா மாணவர்கள் இலகுவஜ்ராசனத்தில் உலக சாதனை