பல்நோக்கு மருத்துவமனையை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர கலெக்டர் அறிவுறுத்தல்

ஈரோடு பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தினை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா அறிவுறுத்தினார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பல்நோக்கு மருத்துவமனையை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர கலெக்டர் அறிவுறுத்தல்
X

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை குறித்து உறைவிட மருத்துவ அலுவலர் கவிதாவிடம் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்டம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தினையும் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் மேற்ககொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணியினையும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (சனிக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையினை பார்வையிட்டு, அம்மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் குறித்தும் அங்கு நாள்தோறும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் மற்றும் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கேட்டறிந்தார்.

மேலும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.64 கோடி மதிப்பீட்டில் 2,32,602 ச.அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தினை பார்வையிட்டு, கட்டிடத்தினை விரைவாக முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ.43 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேலும், பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் மற்றும் வாகன நிறுத்தம் ஆகியவற்றை பார்வையிட்டு, பேருந்து நிலையத்தில் நடைபாதை மற்றும் இருக்கைகள் ஆகியவற்றை அமைத்து பயணாளிகள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதிகள் செய்து தர அலுவலர்களுக்கு ஆட்சிய அறிவுறுத்தினார்.

முன்னதாக, ஈரோடு மாநகராட்சி, சம்பத் நகர் பகுதியில் அமைந்துள்ள நியாயவிலைக்கடையினை பார்வையிட்டு, கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் தரம் மற்றும் பொருட்கள் சுத்தமாக உள்ளதா என்றும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்து, பதிவேடுகளில் உள்ள அளவுகளின்படி, அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு மூட்டைகள் சரியாக உள்ளதா என்பது குறித்தும், நியாயவிலைக்கடையில் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் பார்யிைட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி, சோலாரில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும், வணிக வளாகம் மற்றும் வாகன நிறுத்தம் ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும், இப்பேருந்து நிலையத்தின் மார்க்மாக இயக்கப்பட உள்ள பேருந்துக்கள் குறித்தும் கேட்டறிந்து கட்டுமான பணியினை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் இளஞ்செழியன், இணை இயக்குநர் (குடும்பநலன்) ராஜசேகர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவிச்சந்திரன், செயற்பொறியாளரகள் கிருஷ்ணமூர்த்தி (பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு) சண்முகவடிவு (மாநகராட்சி) உட்பட துறை சார்ந்த அலுவவர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 28 May 2023 2:29 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Puratasi fast on Saturday- புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் விரதம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் ரோடு பாதிப்பு குறித்து அரசுக்கு சொல்ல விரைவில் மொபைல்...
  3. விளையாட்டு
    India vs Australia 2nd ODI நாளை மீண்டும் மோதல்! தொடரை வெல்லுமா...
  4. சேலம் மாநகர்
    சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் செல்போனுக்கு தடை பாதுகாப்பு வசதிக்கு...
  5. பவானிசாகர்
    பர்கூர் பகுதியில் மீண்டும் நூறு நாள் வேலை: தொழிலாளர்கள் மகிழ்ச்சி
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
  7. பவானி
    துவரை நடவுமுறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
  8. தர்மபுரி
    புரட்டாசி சனிக்கிழமை: உழவர் சந்தையில் ரூ.18 லட்சத்திற்கு விற்பனையான ...
  9. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
  10. காஞ்சிபுரம்
    பரந்தூர் விமான நிலைய உயர்மட்ட குழு வருகையை கண்டித்து சாலைமறியல்...