/* */

கோபி அருகே விவசாய தானியங்கி கருவிகள் சோதனை ஓட்டம்

கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய தோட்டத்தில் தானியங்கி கருவிகளின் சோதனை ஓட்டத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்து, ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கோபி அருகே விவசாய தானியங்கி கருவிகள் சோதனை ஓட்டம்
X

தானியங்கி கருவிகளின் சோதனை ஓட்டத்தை, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய தோட்டத்தில் தானியங்கி கருவிகளின் சோதனை ஓட்டத்தை, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்து, ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த பெருமுகை ஊராட்சி எஸ்.ஏ.சோமசுந்தரம் என்ற விவசாய தோட்டத்தில் "நீர்ப்பாசன உரமிடுதல், மண்ணின் ஈரப்பதம் மற்றும் காற்று காலநிலை கணிப்பு அடங்கிய தானியங்கி கருவிகளின் சோதனை ஓட்டத்தை கலெக்டர் நேரில் தொடங்கி வைத்து, ஆய்வு செய்தார். விவசாயிகளுக்காக பல தொழிற்நுட்பத்துடன் உள்ள இந்த கருவிகள் இத்தாலி, ஜெர்மன் போன்ற மேலை நாடுகளில், தற்போது புழக்கத்தில் உள்ளது.

இதையறிந்த பெருமுகை ஊராட்சியில் உள்ள கழனி உழவர் உற்பத்தியாளர் கம்பெனியின் முதன்மை செயலர் கவிதா என்பவர் கோபி வள்ளியாம்பாளையத்தில் உள்ள ஈரோடு வேளாண் அறிவியல் நிலையத்தின் உதவியுடன், ஜெர்மன் சென்று 15 நாட்கள் பயிற்சி பெற்று திரும்பி உள்ளார். கழனி உழவர் உற்பத்தியாளர் கம்பெனியில் ஆயிரத்து இருநூறு விவசாயிகள் உறுப்பினராக உள்ள நிலையில், பெருமுகை ஊராட்சியை சேர்ந்த சோமசுந்தரம் (54) என்ற விவசாயி தனது 3 ஏக்கர் விவசாய நிலத்தில் வாழை, மஞ்சள், கரும்பு பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார்.


இந்நிலையில் கழனி உழவர் உற்பத்தியாளர் கம்பெனியின் முதன்மை செயலர் கவிதாவின் மற்றும் ஈரோடு நபார்டு வங்கியின் உதவியுடன் நீர்பாசன உரமிடுதல் மண்ணின் ஈரப்பதம் மற்றும் காற்று காலநிலை கணிப்பு அடங்கிய செல்போன் மூலம் இயக்கப்படும் தானியங்கி கருவியின் தொழிற்நுட்பத்தை சோமசுந்தரம் தோட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.வேளாண் அறிவியல் நிலைய முதுநிலை விஞ்ஞானி அழகேசன் மூலம் மாவட்ட கலெக்டருக்கு இந்த விவசாய தொழில்நுட்ப கருவி குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று கலெக்டர் கிருஷ்ணன் உன்னி, சோமசுந்தரம் என்பவரது விவசாய தோட்டத்திற்கு நேரில் வந்து துவக்கி வைத்து, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த விவசாய தொழில்நுட்ப கருவி குறித்து சோமசுந்தரத்திடம் கேட்ட போது, இந்த விவசாய தொழில்நுட்பமானது தமிழகத்திலேயே முதன் முறையாக முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டு, விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் ஈரோடு மாவட்டம் பெருமுகை ஊராட்சியில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது, என்று கூறினார்.மேலும், அப்பகுதியின் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள காற்றின் வேகம், திசை, மழையின் காலநிலை அறிந்து கொள்வதோடு, நிறுவப்பட்டுள்ள விவசாயின் தோட்டத்தில் மண்ணின் ஈரப்பத்திற்கு ஏற்ப தானியங்கி முறையில் தண்ணீர் மற்றும் இடுப்பொருட்கள் எடுத்து கொள்ளப்படும் என்றும் விவசாயி தெரிவித்தார்.


இந்த நிகழ்வின் போது, நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அதிகாரி அசோக்குமார், டி.என்.பாளையம் வேளாண்மை துறை அதிகாரிகள், பிடிஓ ராதாமணி, கோபி தாசில்தார் ஆசியா, கிராம நிர்வாக முகமது ஹனிபா மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Oct 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு