ஆசனூர் அருகே வழிமறித்த காட்டு யானை: வாகன ஓட்டிகள் திக்.. திக்..!

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்து நின்ற ஒற்றை காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வதும் சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆசனூர் அருகே , வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்த ஒற்றை காட்டுயானை, அவ்வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றது.

இதனால் அவ்வழியாக சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள், செய்வதறியாமல் திகைத்து, அச்சமடைந்து நின்றனர். சிறிது நேரம் சாலையில் வலம் வந்த காட்டுயானை, சற்று நேரத்தில் தானாகவே காட்டுக்குள் சென்றது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. யானை சென்ற பிறகே வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Updated On: 2021-04-20T12:45:56+05:30

Related News