/* */

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணை நீர்மட்டம் 104 அடியை எட்டுகிறது; கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாகவும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு இருப்பதாலும், பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கீழ்பவானி வாய்க்கால் கசிவு சரிசெய்யப்பட்டதால் இன்று காலை முதல் பவானிசாகர் அணையில் இருந்து மீண்டும் கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 143 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியும். குடிநீர் தேவைக்காக 100 கன அடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு நீர்வரத்து இதே அளவில் இருந்தால் இன்று இரவுக்குள் அணையின் நீர்மட்டம் 104 அடியை எட்டிவிடும். இதையடுத்து பவானி ஆற்றில் அதிக அளவில் உபரி நீர் திறக்கும் நிலை ஏற்படும். இதையடுத்து கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் கரையோர பகுதிகளில் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 7 Nov 2021 8:45 AM GMT

Related News