Begin typing your search above and press return to search.
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து
திம்பம் மலைப்பாதையில், இரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து, பண்ணாரி வழியாக கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டைஊசி வளைவுகள் கொண்டது. இந்த திம்பம் மலைப்பாதையில் தினமும் 24 மணி நேரமும் வாகனப்போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில், கோவையில் இருந்து இரும்பு லோடு ஏற்றி கொண்டு வந்த திம்பம் மலைப்பாதை வழியாக பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, 21வது கொண்டைஊசி வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாரதவிதமாக ரோட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதனால் சுமார், 3 மணிநேரமாக அவ்வழியாக பெரிய வாகனங்கள் செல்ல முடியாமல் மலைப்பாதையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தியதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.