/* */

திம்பம் மலைப்பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திம்பம் மலைப்பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு
X

திம்பம் மலைப்பாதையில் விபத்துக்குள்ளான லாரி. 

தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான, திம்பம் மலைப்பகுதியில், 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மலைப்பாதை வழியாக, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஓவர்லோடு அனுமதிக்கப்படுவதால், கொண்டை ஊசி வளைவுகளில் லாரிகள் அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து மரம் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி, திம்பம் மலைப்பாதை வழியாக இன்று அதிகாலை 5 மணியளவில் லாரி சென்று கொண்டிருந்தது.லாரியை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஜெயபால் (வயது 43) என்பவர் ஓட்டினார். இந்த லாரி 26 வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் ஜெயபால் காயமின்றி உயிர் தப்பினார்.நடுரோட்டிலேயே லாரி கவிழ்ந்து கிடந்ததால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள். பிறகு கிரேன் கொண்டு செல்லப்பட்டு, லாரி மீட்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது..லாரி கவிந்ததால், சுமார் 3 மணி நேரம் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது


Updated On: 23 Oct 2021 12:12 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  2. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  3. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  4. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  5. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  9. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?