/* */

மாட்டுப்பொங்கலையொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காணும் பொங்கல் விழாவான இன்று இதைவிட அதிகமாக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என கூறப்படுகிறது

HIGHLIGHTS

மாட்டுப்பொங்கலையொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
X

பவானி சாகர் அணை பூங்கா(பைல் படம்)

மாட்டுப்பொங்கலையொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

இந்தியாவில் புகழ் பெற்ற அணைகளில் பவானிசாகர் அணையும் ஒன்றாகும். இந்தியாவில் மிகப்பெரிய இரண்டாவது அணை பவானி சாகர் அணையாகும். இந்த அணையானது பல சிறப்புக்களை உள்ளடக்கிய பொக்கிஷம் ஆகும்.கோயம்பத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆறும் நீலகிரி மாவட்டத்தில் உருவாகும் மோயாரும் கலக்கும் இடத்திலேயே இவ்வணை கட்ட தீர்மானிக்கப்பட்டது.

இவ்வகையில் 1948 ஆம் ஆண்டு இத்திட்டம் தீட்டப்பட்டது. 1948 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இவ்வணையானது 1955 இல் நிறைவு செய்யப்பட்டது. இவ்வணையை கட்டுவதற்கு 10 கோடி 50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது.இவ்வணையை 20 கிராம மக்கள் ஒன்றினைந்தே கட்டி முடித்துள்ளனர். இவ்வணையானது சுமார் 7 வருடத்தில் கட்டி முடிக்கப்பட்டது. 1955 ஆம் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி இவ்வணை திறக்கப்பட்டது.

இவ்வணையின் முழுக்கொள்ளளவு 120 அடி ஆனால் சேறும், சகதியும் கழித்து 105 அடியாக கணக்கில் எடுக்கப்படுகின்றது. இவ்வணையானது முழுமையாக மண்ணினாலேயே கட்டப்பட்டது.இவ்வணையின் மூலம் ஈரோட்டில் உள்ள அனைத்து விவசாய நிலங்களும் நீர் பிரித்து வழங்கப்படுகின்றது. பவானி சாகர் அணையின் வாய்க்கால் மூலமாக 2.7 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறுகின்றன.

இவ்வணையின் நடுவே கொடிவேரி அணை, காளிங்கராயன் ஆகிய இரு அணைகள் கட்டப்பட்டு நீர் பிரித்து விவசாயத்திற்கு அனுப்படுகின்றது. இதில் கொடிவேரியன் அணை மூலம் 2500 ஏக்கர் நிலங்களுக்கும் காளிங்கராயன் அணை மூலம் 1500 ஏக்கர் நிலங்களுக்கும் நீர் வழங்கப்படுகின்றது.

இவ்வணையின் அருகே இரண்டு மின்நிலையங்கள் காணப்படுகின்றன. 1956 ஆம் ஆண்டு முழுக் கொள்ளளவு நீர் நிரம்பியது. அதன் பின் 12 வருடம் சென்ற பின்பே முழுமையான நீர் மீண்டும் நிரம்பியது.இவ்வணையானது கட்டப்பட்டு இன்று வரை 67 வருடங்களாகிவிட்டன. 67 வருடங்களில் 17 தடவைகள் இவ்வணை முழுமையாக நிரம்பியது.

இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க பவானிசாகர் அணையின் முன்புறம் நீர்வளத் துறைக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. மாட்டுப்பொங்கலையொட்டி நேற்று விடுமுறை என்பதால் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கார், இருசக்கர வாகனம் மற்றும் பஸ்களில் பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்தனர். பின்னர் அவர்கள் ஊஞ்சல், சறுக்கு, கொலம்பஸ் பல்வேறு விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பூங்காவில் உள்ள புல் தரைகளில் அமர்ந்து உணவு சாப்பிட்டும், படுத்து ஓய்வெடுத்தும் பொழுது போக்கினர்.

மாட்டுப்பொங்கல் தினமான நேற்று பவானிசாகர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த நிலையில் காணும் பொங்கல் விழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) இதைவிட அதிகமாக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 17 Jan 2023 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  2. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  3. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  7. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  8. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...
  9. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி