Begin typing your search above and press return to search.
தாளவாடி அருகே புலி நடமாட்டம்; பொதுமக்கள் அச்சம்
தாளவாடி அருகே புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்
HIGHLIGHTS

தாளவாடி பகுதியில் பதிவான புலியின் தடம்
தாளவாடி அருகே உள்ள பாரதிபுரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 45). ஆடு, மாடுகளும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை அவருடைய வீட்டு தோட்டத்துக்கு மர்ம விலங்கு திடீரென வந்து உள்ளது.
அவரை கண்டதும் உடனே அந்த விலங்கு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுபற்றி அவர் தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பழனிச்சாமியின் தோட்டத்தில் பதிவாகி இருந்த கால் தடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அது புலியின் கால் தடம் என உறுதியானது. கிராமத்துக்குள் புலி புகுந்ததை அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.