/* */

27 நாட்களாக தொடர்ந்து 101 அடியில் இருக்கும் பவானிசாகர் அணை நீர் மட்டம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 27 நாட்களாக 101.69 அடியாக உள்ளது.

HIGHLIGHTS

27 நாட்களாக தொடர்ந்து 101 அடியில் இருக்கும் பவானிசாகர் அணை நீர் மட்டம்
X

பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக கடந்த 30 நாட்களுக்கு மேலாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடிக்கு இருந்து வருகிறது. பின்னர் நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

இந்நிலையில் மீணடும் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சுமார் 27 நாட்களாக 100 அடியில் இருந்து வந்த பவானிசாகர் அணை 101 அடியை எட்டி உள்ளது.

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை 101.69 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 603 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடியும் என மொத்தம் 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 29 Aug 2021 5:13 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!