1 லட்சம் மதிப்பிலான பட்டு புடவைகள் பறிமுதல்
பவானிசாகர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட சுமார் 1 இலட்சம் மதிப்பிலான பட்டு புடவைகள் பறிமுதல்.
HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எரங்காட்டூர் பகுதியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கடாசலம் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சத்தியமங்கலம் சாலையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட சுமார் 1 இலட்சம் மதிப்பிலான பட்டு புடவைகள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் காரில் வந்த நபர் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த ஜானகிராமன் என்பதும் இவர் அப்பகுதியில் புடவை வியாபாரம் செய்து வருவதாகவும் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள துணிக்கடையில் ஆர்டர் எடுக்க மாதிரி புடவைகளை எடுத்து வந்ததாகவும் தெரியவந்தது. அவர் எடுத்துவந்த புடவைகளுக்கு உரிய ஆவணம் இல்லாத காரணத்தினால் அவரிடமிருந்த 143 புடவைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சத்தியமங்கலம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.