/* */

ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக அரசு பேருந்தில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது.

HIGHLIGHTS

ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு கர்நாடக அரசு பேருந்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சத்தியமங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் சத்தியமங்கலம் காவல் காவல்துறையினர் மைசூரை நோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடக அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 10 மூட்டைகள் அடங்கிய 240 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. பின்னர் அந்த மூட்டைகளை கொண்டுவந்தது யார் என காவல்துறையினர் பயணிகளிடம் மேற்கொண்டனர். அப்போது ஒருவர் மட்டும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பதும் தற்போது சத்தியமங்கலம் கோணமூலை பகுதியில் வசித்து வருவதாகவும் கோணமூலை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி வாங்கி கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை துணை ஆய்வாளர் லோகராஜிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 24 March 2021 4:22 AM GMT

Related News