தலைமை வனப்பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு

ஈரோடு சத்தியமங்கலத்தில் மாவட்ட வன அலுவலரிடம், தலைமை வனப்பாது காவலர் மீது நடவடிக்கை எடுக்கோரி புகார் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்தில் வனச்சரகராக பணிபுரியும் வெங்கடாசலம் மற்றும் ஜீரகள்ளி வனச்சரகத்தில் வனச்சரகராக பணிபுரியும் முத்து ஆகிய இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குனர் நிஹார் ரஞ்சன் அவர்களது உத்தரவால் பணிமாறுதல் உத்தரவு செய்யப்பட்டு கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல முறை உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் இவர்களுக்கு பணி உத்தரவு கிடைக்காத காரணத்தினால் இன்று காலை தங்களது குடும்பத்தினருடன் இரண்டு வனச்சரகர்களும் சத்தியமங்கலத்தில் உள்ள மாவட்ட வன அலுவலர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.

இவர்களுடன் வந்த தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சிவப்பிரகாசம் கூறும் பொழுது, ஒரு மாதத்திற்கு முன்பு இந்த இரண்டு வனச்சரகர்களுக்கும் மாறுதல் உத்தரவு செய்து பழிவாங்கும் நோக்கத்தில் கட்டாய காத்திருப்பில் முதன்மை வனப்பாதுகாவலர் வைத்துள்ளார்.

இது கேவலமான செயலாக எங்களது சங்கம் கருதுகிறது. இவர்கள் கட்டாய காத்திருப்பில் இருப்பதால் அரசுக்கு செய்ய வேண்டிய பணிகள் எதுவும் நடைபெறாமல் இவர்களுக்கு கொடுக்கும் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் சம்பளம் அரசுக்கு நஷ்டம். மேலும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் ஆசனூர் மற்றும் தாமரைக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள ஓய்வு விடுதிகளில் நண்பர்களுடன் சென்று தங்கி அங்கு இருக்கும் வனச்சரக அலுவலர்களிடம் வெளிநாட்டு மதுபானம் வேண்டும் எனவும் அசைவ உணவு உள்ளிட்ட ஏராளமான செலவுகளை செய்ய வைத்து அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்.

இதனால்தான் வனக்காப்பாளர் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டார். மேலும் இவரது நடவடிக்கை இதே போன்று தொடருமானால் பலரது நிலைமை கேள்விக்குறி ஆகிவிடும். ஆகவே தலைமை வனப்பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் தலைமை வனப்பாதுகாவலர் நிகார் ரஞ்சன் மீது இரண்டு வனச்சரகர்கள் கூறிய குற்றச்சாட்டு மற்றும் மாவட்ட வன அலுவலர் அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 30 March 2021 10:15 AM GMT

Related News

Latest News

 1. தொண்டாமுத்தூர்
  கோவை ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவி வீட்டில் தற்கொலை
 2. பரமத்தி-வேலூர்
  பரமத்தி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் அ.தி.மு.க. முற்றுகைப் போராட்டம்
 3. நாமக்கல்
  கல்வி நிறுவனவாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தல்
 4. திருவள்ளூர்
  திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்
 5. இந்தியா
  நூல் விலை: இன்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள்
 6. நாமக்கல்
  நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடி மதிப்பில் பருத்தி ஏல விற்பனை
 7. பொன்னேரி
  திருவள்ளூர் அருகே விச்சூர் செல்லியம்மன் கோயில் சந்திப்பு உற்சவம்
 8. ஆரணி
  தனியார் கோல்டு நிறுவனத்தில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா திடீர் ஆய்வு
 9. கீழ்பெண்ணாத்தூர்‎
  திருவண்ணாமலை: அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
 10. வழிகாட்டி
  சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு சரியான விருப்பத் தாளை தேர்வு செய்யுங்கள்