/* */

கர்நாடகாவுக்கு 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது

தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றவரை போலீசாா் கைது செய்து சரக்கு ஆட்டோவும் பறிமுதல்.

HIGHLIGHTS

கர்நாடகாவுக்கு 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது
X

கைது செய்யப்பட்ட ராஜேஷ்.

தாளவாடியை அடுத்த அருள்வாடி கிராமத்தில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீசார் அருள்வாடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.சோதனையின் போது சரக்கு ஆட்டோவில் மூட்டை மூட்டையாக 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்தவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், 'அவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அருகே உள்ள ஹம்சவாடி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 36) என்பதும், அருள்வாடி கிராமத்தில் இருந்து ரேஷன் அரிசியை கர்நாடகாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜேசை போலீசார் கைது செய்ததுடன், சரக்கு ஆட்டோ மற்றும் 1,200 கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றையும் பறிமுதல் செய்து மாவட்ட உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 20 Oct 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  5. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  9. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!