Begin typing your search above and press return to search.
இயந்திரம் பழுது- வாக்குப்பதிவு நிறுத்தம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குபதிவு இயந்திரம் பழுதானது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தனி தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 202 வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் பழுதானதால் சுமார் ஒரு மணி நேரம் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து சத்தியமங்கலம் வட்டாட்சியர் சிவசங்கர் வேறு புதிய வாக்கு பதிவு இயந்திரத்தை கொண்டு வந்து மாற்றி வைத்த பின், மீண்டும் வாக்குப்பதிவு துவங்கியது. மொத்தம் சுமார் 400 வாக்குகளில் 214 வாக்குகள் பழுதான இயந்திரத்தில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. வாக்குபதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் பெண்கள் பூத்தில் வாக்குப்பதிவு தாமதமாக பதிவானது.