/* */

ஆசனூர் அருகேதேசிய நெடுஞ்சாலையை கடந்த சிறுத்தை

ஆசனூர் அருகே திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை சிறுத்தை கடந்து சென்றதால், வாகன ஓட்டிகளிடையே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

HIGHLIGHTS

ஆசனூர் அருகேதேசிய நெடுஞ்சாலையை கடந்த சிறுத்தை
X

நெடுஞ்சாலையை கடந்து செல்லும் சிறுத்தை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இதில் ஆசனூர் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை ஆசனூரை அடுத்த தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் அருகே தேசிய நெடுஞ்சாலையை சிறுத்தை ஒன்று கடந்து துள்ளிக்குதித்து சென்றது. அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த ஒருவர் ரோட்டை கடந்த சிறுத்தையை தன் செல்போன் மூலம் படம் பிடித்தார்.

சாலையை கடந்த சிறுத்தையால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகளிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 31 Oct 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  2. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  3. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  4. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  5. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  6. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்
  7. அரசியல்
    தென்சென்னையில் கரையேறுவாரா தமிழிசை?
  8. திருவண்ணாமலை
    தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை
  9. காஞ்சிபுரம்
    சங்கரா கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி...
  10. சிங்காநல்லூர்
    தோல்வி பயத்தில் வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள்: அண்ணாமலை...