பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 8,500 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 8,500 கன அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக அணை இருந்து வருகிறது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஊட்டி, தெங்குமரகடா மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பவானிசாகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.நேற்று அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 813 கனஅடி தண்ணீர் வந்தது. இது படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு 8 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,300 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்காலுக்கு 500 கனஅடியும், பவானி ஆற்றுக்கு 5 ஆயிரத்து 700 கன அடி என மொத்தம் 8 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் அணையின் கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Updated On: 23 Oct 2021 7:45 AM GMT

Related News

Latest News

 1. கல்வி
  JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இலக்கிய விழா
 2. பொன்னேரி
  அ.தி.மு.க. ஊராட்சி தலைவர் கொலை தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வைரல்
 3. ஈரோடு
  கோபி அருகே பெண்ணிடம் தாலிக்கொடியை பறிக்க முயன்ற மர்ம நபர்களால்...
 4. வானிலை
  தமிழகம், புதுவையில் எங்கெல்லாம் கனமழை பெய்யும்? வானிலை மையம் தகவல்
 5. தமிழ்நாடு
  இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள்: நாளை சென்னையில் இருந்து அனுப்பிவைப்பு
 6. ஈரோடு
  அந்தியூர் அருகே பாலாற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
 7. அரியலூர்
  இருசக்கரவாகன வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் மீது குண்டர் தடுப்பு...
 8. அரியலூர்
  சுண்ணாம்புக்கல் சுரங்க விஸ்தீரண பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்
 9. அரியலூர்
  படைக்கலன் தணிக்கை செய்ய கலெக்டர் உத்தரவு
 10. அரியலூர்
  இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு