ஈரோட்டில் அரசு பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரோடு அருகே அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பள்ளிக்கு தற்காலிக விடுமுறை

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஈரோட்டில் அரசு பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி
X

கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தமிழகத்தில் தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியதால் கடந்த 1ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல், பிளஸ்- 2 வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளுடன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தங்கியிருக்கும் பகுதியில் சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில் அந்தப் பெண்ணின் 16 வயது மகன் புஞ்சைபுளியம்பட்டி கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த மாணவனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று ஏற்பட்ட மாணவன் கடந்த 1ஆம் தேதி அன்று பள்ளிக்கு வந்து உள்ளான். அதற்கு மறுநாள் அந்த மாணவனின் அம்மாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அதன் பிறகு அந்த மாணவன் பள்ளிக்கு செல்லவில்லை.

இதையடுத்து மாணவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த வகுப்பறையில் உள்ள 27 மாணவர்களுக்கும், 42 ஆசிரியர்களுக்கும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. மேலும் அந்தப் பள்ளிக்கு தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை எதிர்நோக்கி அச்சத்தில் உள்ளனர்.

Updated On: 5 Sep 2021 10:45 AM GMT

Related News