/* */

சத்தியமங்கலம்: வயலில் அழுகும் சம்பங்கி பூக்கள் - விவசாயிகள் வாட்டம்!

தினமும் பூக்கள் அழுகி நஷ்டம் ஏற்படுவதால் மலர்சந்தை செயல்பட அனுமதிக்க வேண்டும் என, சத்தியமங்கலம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயிகள் அதிகளவில் சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் பூக்கள், சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு கொண்டு வரப்பட்டு ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, மலர்ச்சந்தை செயல்பட தடை விதி்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சம்பங்கி பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுகின்றனர். இதன் காரணமாக, பூக்கள் செடியிலேயே காய்ந்து அழுகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, தமிழக அரசு மலர் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க, தினமும் குறிப்பிட்ட நேரம் அவகாசம் கொடுத்து, மலர்ச்சந்தை செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 7 Jun 2021 7:51 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  3. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  6. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  7. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  8. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  10. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி