/* */

கால்நடைகள் நோயின்றி வாழ சிறப்பு வழிபாடு.. நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் குவிந்த விவசாயிகள்...

Matheswaran Temple-மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் விவசாயிகள் வழிபாடு நடத்தினர்.

HIGHLIGHTS

கால்நடைகள் நோயின்றி வாழ சிறப்பு வழிபாடு.. நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் குவிந்த விவசாயிகள்...
X

நடுமலை மாதேஸ்வரன் வழிபட்டு விவசாயிகள் கோயிலில் நேர்த்திக் கடனாக செலுத்திய மண் பொம்மைகளை வழங்கினர்.

Matheswaran Temple-மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கால்நடைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், சத்தியமங்கலம் சுற்றுப்புற பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தொழுவத்தில் கட்டியிருந்த மாடுகளை குளிப்பாட்டி அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, கழுத்தில் மணிகள் பாசிகள் சேர்க்கப்பட்ட அலங்கார கயிறு கட்டி அழகுப்படுத்தினர்.

மேலும், ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் சத்தியமங்கலம் புளியங்கொம்பையில் உள்ள நடுமலை மாதேஸ்வரன் கோயில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நேற்று திறக்கப்பட்டது. பின்னர், அந்த கோயிலில் உள்ள நந்தீஸ்வரன் நந்தி சிலைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கால்நடைகள் நோயின்றி நீண்ட நாள் வாழவும், விவசாயம் செழிக்கவும் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

மேலும், வழிபாட்டில் கலந்து கொண்ட விவசாயிகள் தாங்கள் கொண்டுவந்த மண்ணால் தயாரா செய்யப்பட்ட பொம்மைகளை காணிக்கையாக செலுத்தி வழிபட்டினர். அதாவது, கால்நடைகள் போன்று மண்ணால் செய்யப்பட்ட உருவ பொம்மைகளை இந்தக் கோயிலுக்கு நேர்ச்சை செய்து வழிபாடு நடத்தினால், தங்களது வீடுகளில் உள்ள கால்நடைகளுக்கு நோய் தாக்காது என்பது ஐதீகம்.

தொடர்ந்து, வழிபாட்டிற்கு பிறகு கோயிலில் வழங்கப்பட்ட தீர்த்தத்தை விவசாயிகள் தங்களது வீடுகளுக்கு கொண்டுச் சென்றனர். பின்னர், அந்த தீர்த்தத்தை கால்நடைகள் மீது தெளித்து அவர்கள் வழிபட்டனர். புளியங்கொம்பை நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 19 March 2024 4:55 AM GMT

Related News