/* */

கொரோனாவால் பலியானவர் உடலை அடக்கம் செய்ய முன்வராத உறவினர்கள்!

கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் யாரும் முன்வராத நிலையில் விடியல் இளைஞர் மன்றத்தினர் மற்றும் சுகாதாரத்துறையினர் முன்வந்து அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த பசப்பன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் கொங்க மல்லப்பா(55).இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். திங்கட்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதால் தன்னுடைய வீட்டிற்கு புறப்பட்டு வந்துவிட்டார். வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்த நிலையில், திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து மருத்துவர்கள் அங்கு செல்வதற்கு முன்பு, அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு உயிர் இழந்ததால் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் யாரும் வராததால் அவரது உடல் வீட்டிலயே கேட்பாரற்று கிடந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற விடியல் இளைஞர் மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர், உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்று அடக்கம் செய்தனர். விடியல் இளைஞர் மன்றத்தினரின் செயலை பலரும் பாராட்டினர்.

Updated On: 11 May 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?