/* */

தடுப்புச்சுவரில் மோதிய லாரி - திம்பம் மலை பாதையில் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் , கன்டெய்னர் லாரி தடுப்பு சுவரில் மோதி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையானது 27 கொண்டைஊசி வளைவுகளை கொண்டது. தமிழ்நாடு-கர்நாடகாவை இணைக்கும் முக்கியப்பாதையாக, திம்பம் மலைப்பாதை உள்ளது. இவ்வழியாக நாள்தோறும் காய்கறி வண்டிகள், சரக்கு வாகனங்கள் என ஏராளமான வண்டிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், இன்று கர்நாடகா மாநிலத்தில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று, ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது 9வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முற்படும்போது, பக்கவாட்டு சுவரில் மோதி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார், கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே நோயாளியை ஏற்றுவதற்காக அவ்வழியாக ஆம்புலனஸ் ஒன்று வந்நது. அதனை கண்ட வாகன ஓட்டிகள், கன்டெய்னர் லாரியின் அருகே இருந்த மிக குறுகலான இடத்தின் வழியே ஆம்புலன்ஸ் செல்ல உதவி செய்து அனுப்பி வைத்தனர்.

Updated On: 28 May 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?