Begin typing your search above and press return to search.
காவிரியில் வெள்ள அபாயம் : கரையோர மக்களை எச்சரிக்கிறார் தாசில்தார்
காவிரியில் வெள்ளம் வருவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று, பவானி தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
HIGHLIGHTS

கோப்பு படம்
காவிரியில் வெள்ளம் வருவது குறித்து, பவானி தாசில்தார் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: மேட்டூர் அணை தற்போது 120 அடியை எட்டியுள்ளது. உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. பவானி வட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள சிங்கம்பேட்டை, காடப்பநல்லூர், கேசரிமங்கலம், வரதநல்லூர், சன்னியாசிபட்டி, ஊராட்சி கோட்டை, குருப்பநாயக்கன்பாளையம், பவானி மற்றும் இதர ஊர்களின் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம். தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, ஈரோடு மாவட்ட கலெக்டர் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.