/* */

பஸ் பயணியிடம் ரூ. 7.18 லட்சம் பறிமுதல்

பஸ் பயணியிடம் ரூ. 7.18 லட்சம் பறிமுதல்
X

சத்தியமங்கலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் பஸ்சில் சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 7 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையிலிருந்து சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் கர்நாடக அரசு பஸ்ஸை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது பஸ்ஸில் பயணம் செய்த பயணி ஒருவர் உரிய ஆவணம் இன்றி 7 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்தது தெரியவந்தது.

விசாரணையில் பணம் எடுத்து வந்த நபர் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பதும் இவர் கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டை பகுதியிலுள்ள மார்க்கெட் ஒன்றில் தானியம் வாங்குவதற்காக பணம் எடுத்து சென்றதும் தெரியவந்தது. அவர் எடுத்து வந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாத காரணத்தினால் அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சத்தியமங்கலம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 1 April 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  2. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  3. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  4. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  5. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!
  6. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    விவசாயத்தின் வேதனை – விளைநிலங்கள் விற்பனைக்கு !
  8. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  9. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் தத்துவங்கள்: தமிழ் மொழியின் வழிகாட்டி!