/* */

ஈரோடு: பவானிசாகர் அணை நீர்மட்ட நிலவரம்

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு: பவானிசாகர் அணை நீர்மட்ட நிலவரம்
X

பவானி சாகர் அணை

ஈரோடு,கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் முழு கொள்ளளவு 105 அடி ஆகும்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பவானி சாகர் அணை கடந்த சில நாட்களாக 102 அடியில் தொடர்ந்து இருந்து வருகிறது. அணையின் விதிப்படி 102 அடி நிரம்பியதும் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திரும்பிவிட வேண்டும். அதன்படி பவானி ஆற்றுக்கு உபரிநீர் திருப்பி விடப்பட்டு வருகிறது.

இன்று காலை நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2 ஆயிரத்து 37 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காளிங்கராயன் பாசத்திற்கு 496 கன அடியும், பவானி ஆற்றுக்கு 1504 கன அடி என மொத்தம் 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 11 Sep 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்