/* */

பவானி ஆற்றின் உபரி நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணையிலிருந்து 5,100 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுலதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

பவானி ஆற்றின்  உபரி நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் 5,100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 5,100 கனஅடி உபரி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால் துணி துவைத்தல், ஆடு, மாடு மேய்ச்சல் மற்றும் பரிசல் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 105 அடி உயரம், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு அதிகரித்துள்ளதால் 105 அடி உயரம் நீர்வரத்து உள்ள அணையின் நீர்மட்டம் நேற்று 103.86 அடியை எட்டியது. அணைக்கு மேலும் அதிகமாக நீர்வரத்து வர இருப்பதால் பேரிடர் நீர் மேலாண்மை அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி அணைப் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் மதகுகள் வழியாக விநாடிக்கு 5,100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் ஆகஸ்ட், அக்டோபர் மாதத்தைத் தொடர்ந்து தற்போது 3ஆவது முறையாக அணை பவானிஆற்றில் .வெளியேற்றப்படும் உபரிநீர் பவானிசாகர்,சத்தியமங்கலம், பெரியகொடிவேரி, நஞ்சைபுளியம்பட்டி, கள்ளிப்பட்டி வழியாக பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் கலக்கிறது

இதனால் டெல்டா பாசன விவசாயிகளும் பயனடைவார்கள் என விவசாயிகள் தெரிவித்தனர். அணை நீர் மட்டம் 103.86 அடி, உபரி நீர்வரத்து 5,100 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 5,100 கனஅடியாகவும் நீர் இருப்பு.31.84 டிஎம்சியாகவும் உள்ளது.

Updated On: 7 Nov 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  2. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  3. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  4. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  5. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  6. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  7. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  8. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  9. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  10. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு..!