எங்கள் ஓட்டு நோட்டாவுக்கே : விவசாயிகள் சங்கம்

வரும் சட்டமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கப் போவதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
எங்கள் ஓட்டு நோட்டாவுக்கே : விவசாயிகள் சங்கம்
X

தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் அதன் மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள காராச்சிக்கொரை கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் போது காப்பகத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றிகள், மயில், மான், குரங்குகள், சிறுத்தை போன்ற வன விலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களையும் மனித உயிர்களையும் காப்பாற்ற கோரி பல வருடங்களாக போராடி வருகின்றோம்.

கடந்த பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என பல தேர்தல்களில் வாக்களித்தும் இன்று வரை தங்களுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் உள்ளதாகவும் நடக்க உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிக்கிறோம். வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளின் பிரச்சனையை பற்றி எந்த அரசியல் கட்சியுமே தங்களது வாக்குறுதிகளில் அறிவிக்காததால் இந்த முடிவை எடுக்கப் போவதாக அறிவித்துள்ள விவசாயிகள், யாருக்கும் வாக்களிக்காமல் நோட்டாவுக்கு வாக்களிக்கப் போவதாக முடிவு செய்தனர். தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட பல லட்சக்கணக்கான விவசாயிகள் அனைவரும் நோட்டாவுக்கு வாக்களிப்பார்கள் என தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளனர்.

Updated On: 20 March 2021 12:13 PM GMT

Related News