பவானிசாகர் அணை தண்ணீர் நிறுத்தம்

பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பவானிசாகர் அணை தண்ணீர் நிறுத்தம்
X

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது.

அதே போல் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94.13 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 463 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று வரை பவானிசாகர்அணையில் இருந்து காளிங்கராயன் பாசனத்திற்காக 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்தது. ஆனால் இன்று முதல் பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. அதைப்போல் இன்று முதல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 7 March 2021 6:10 PM GMT

Related News