சத்தியமங்கலம்: கேஸ் வெல்டிங் ஒர்க் ஷாப்பில் தீ விபத்து

கேஸ் வெல்டிங் ஒர்க் ஷாப்பில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென கடை முழுவதம் தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சத்தியமங்கலம்: கேஸ் வெல்டிங் ஒர்க் ஷாப்பில் தீ விபத்து
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் சத்தியமங்கலம் கோவை சாலையில் கேஸ் வெல்டிங் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். சொந்த பணியின் காரணமாக உரிமையாளர் முனுசாமியின் வெளியே சென்றதால் இன்று அவரது ஒர்க் ஷாப் திறக்கப்படவில்லை.


இந்நிலையில் இன்று மாலை சுமார் நான்கு மணி அளவில் கேஸ் வெல்டிங் ஒர்க் ஷாப்பில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென கடை முழுவதம் தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியுள்ளது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் லாரி பணிமனையில் வேலை பார்த்து கொண்டிருந்த சிலர் உடனடியாக குடங்களில் தண்ணீர் ஊற்றியும் மண்களை அள்ளி நெருப்பின் மீது வீசியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருக்கும் தீயை அருகில் எங்கும் பரவாத வண்ணம் கட்டுக்குள் கொண்டுவந்தனர். வெல்டிங் ஒர்க் ஷாப்பில் கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 12 Feb 2021 3:42 PM GMT

Related News