/* */

காட்டு யானை தாக்கி காவலாளி உயிரிழப்பு

காட்டு யானை தாக்கி காவலாளி உயிரிழப்பு
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி காவலாளி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகம் கெம்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு உட்பட்ட அட்டணை கிராமத்திலுள்ள சடையப்பன் என்பவருக்கு சொந்தமாக தோட்டம் ஒன்று உள்ளது. இத்தோட்டத்தில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இத்தோட்டத்தினை பாதுகாப்பதற்காக இரவு காவலுக்காக பெரியசாமி (45) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் பெரியசாமி காவலில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று பெரியசாமியை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெரியசாமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த விவசாயி சடையப்பனையும் காட்டு யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடம்பூர் காவல்துறையினர் யானை தாக்கியதில் உயிரிழந்த பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் யானை தாக்கியதில் படுகாயமடைந்த சடையப்பனையும் மருத்துவ சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கடம்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 Jan 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  4. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  5. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  6. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  7. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  9. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்