ஓடும் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஓடும் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை
X

ஈரோடு மாவட்டத்தில் ஓடும் ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைக்கிராமம் குன்றியை சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி (19) . நிறைமாத கர்ப்பிணியான பரமேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். அதிகாலை 5 மணிக்கு குன்றியில் இருந்து பரமேஸ்வரியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக கடம்பூர் மலையிலிருந்து மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஆம்புலன்ஸ் மல்லியம்மன் கோவில் அருகே உள்ள மஞ்சப்பாறை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது பரமேஸ்வரிக்கு மீண்டும் பிரசவ வலி எடுத்தது. உடனடியாக ஆம்புலன்சிலேயே ஓட்டுநர் வெள்ளிங்கிரி மற்றும் மெடிக்கல் டெக்னிசியன் சங்கர் ஆகியோர் பிரசவம் பார்த்ததில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இருவரையும் சத்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறினர்.

Updated On: 9 Jan 2021 6:30 AM GMT

Related News