/* */

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70 அடியாக சரிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 70.97 அடியாக சரிந்தது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70 அடியாக சரிவு
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 70.97 அடியாக சரிந்தது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில நாட்களாக, பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால், அணைக்கு அவ்வப்போது அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் என மாறி மாறி வந்து கொண்டுள்ளது.

மேலும், கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து தற்போது 70 அடிக்கும் கீழே சென்றுவிட்டது.

அதன்படி, இன்று (அக்டோபர்.01) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 70.97 அடி ,

நீர் இருப்பு - 11.36 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 1,728 கன‌ அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 2,900 கன‌ அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,300 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 500 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 100 கன அடி நீரும் என மொத்தம் 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Updated On: 1 Oct 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க