/* */

76 அடியாக குறைந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (ஜூலை 4) காலை 8 மணி நிலவரப்படி 76.94 அடியாக குறைந்தது.

HIGHLIGHTS

76 அடியாக குறைந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம்
X

பவானிசாகர் அணை (பைல் படம்).

105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 77 அடிக்கும் கீழே சென்றுவிட்டது.

இன்று (ஜூலை.,04) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 76.94 அடி (105 அடி) ,

நீர் இருப்பு - 14.11 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 138 கன அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 1,205 கன அடி ,

காளிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடி நீரும், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி நீரும் , குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும் என மொத்தம் 1,205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Updated On: 4 July 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...