/* */

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

bhavanisagar dam today water level ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 237 கன அடியாக உள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் இன்றைய   நீர்மட்ட நிலவரம்
X

பவானிசாகர் அணை (பைல் படம்).

bhavanisagar dam today water level

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், அணைக்கு அவ்வப்போது அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் என மாறி மாறி வந்து கொண்டுள்ளது. தற்போதைய, நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 237 கன அடியாக உள்ளது.

இன்று (ஆகஸ்ட் 19) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 82.92 அடி ,

நீர் இருப்பு - 17.28 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 237 கன அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 955 கன அடி ,

காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்கு 350 கன அடி நீரும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்காலில் பாசனத்திற்கு 500 கன அடி நீரும், குடிநீருக்காக பவானி ஆற்றில் குடிநீருக்காக 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும் என மொத்தம் அணையில் இருந்து 805 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Updated On: 19 Aug 2023 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு